தஞ்சாவூர் ஜூலை 12.
தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சா வூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டு வரும் ஆர்வலர்களை கண்டறி ந்து அவர்தம் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை ஆண்டு தோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரை தேர்வு செய்து அவர்க ளுக்கு தமிழ் செம்மல் விருது வழங்கிசிறப்பித்து வருகிறது. தமிழ் செம்மல் விருத்தாளர்களுக்கு ரூபாய் 25,000 பரிசுத்தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப் பட்டு வருகிறது.
இதன்படி இந்தாண்டுக்கான தமிழ் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட் டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் இடமிருந்து வரவேற்கப்படுகின் றன. விருதுக்குரிய விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறை யின்www.tamilvalarchithurai.tn.gov.in என்றவலைதளத்தில் விண்ணப்ப படிவங்கள் என்ற தலைப்பின் கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ் செம்மல் விருதுக்கு விண் ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள் விருதுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தன் விவர குறிப்பு, நூல்கள், கட்டுரைகள் ஏதேனும் வெளியிட்டிருந்தால் அதை பற்றிய விவரங்கள் ,தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப் பில் அல்லது உறுப்பினராக இருப் பின் அது பற்றிய விவரம் தமிழ் அறிஞர்கள் இருவரின் பரிந்துரை கடிதம், மாவட்டத்தில் செயல்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரை கடிதம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆற்றிய தமிழ் பணிகளுக்கான சான்றுகளையும் இணைத்து, தஞ்சாவூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் கிடைக் கும் வகையில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவ லக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை04362-271530என்ற தொலைபேசி எண் ணில் தொடர்பு கொள்ளலாம். தமிழ் அறிஞர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட் டுள்ளது.