திருப்பத்தூர்:பிப்:23, திருப்பத்தூர் மாவட்டம்
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட
ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி ஆண்டுவிழா நடைப்பெற்றது.
பள்ளியின் ஆண்டு விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமாரி தலைமையேற்று தலைமை உரையையும் பள்ளியின் ஆண்டறி க்கையும் வாசித்தார். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். எலவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.மேனகா விவேகானந்தன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி.சித்ரா அவர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.விவேகானந்தன் ,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.காளியப்பன் , பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளரும் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளருமான திரு.ரஜினி,ஓய்வுப் பெற்ற அஞ்சல் ஊழியர் திரு.பெருமாள்,பள்ளி மேலாண்மைக் குழு முன்னாள் மாணவர் பிரதிநிதி திரு. கோகுல் ஆகியோர் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். PTA பொருளாளர் திரு.நாகராஜன் , ஊராட்சி துணைத் தலைவர் திரு.ஆனந்தன், PTA உறுப்பினர்கள், SMC உறுப்பினர்கள் , ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆலமரத்து வட்டம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அம்சவேணி செவ்வத்துர் மோட்டூர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ராஜகுமாரி, வெங்கடப்பன், கங்கா , முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் , பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர். பள்ளியில் கல்வி, வருகைப் பதிவு மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களும், பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் செயல்பட்டு வரும் JRC,SCOUT மற்றும் ECO CLUB மாணவர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்புற நடந்தேறியது. பட்டதாரி ஆசிரியர் செல்வகுமார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் நாகராஜன் நன்றியுரை நிகழ்த்தினார்.