கோவை ஜன:25
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விழாவில் பொள்ளாச்சி திஷா பள்ளியின் முதல்வர் உமா ரமணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளியின் முதல்வர் விக்டோரியா சாந்தி அவர்கள் முன்னிலை வகித்தார்.
பள்ளியின் முதன்மை கல்வி தலைவர் சௌமியா சந்தோஷ் அவர்கள் பள்ளியின் விளையாட்டு போட்டிகளின் சிறப்புகளை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். பள்ளியின் நிர்வாக அலுவலர் சுரேஷ் அவர்கள் மாணவ மாணவிகளிடையே தன்னம்பிக்கை உரையாற்றினார்.
தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்பம், கராத்தே, நடனம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.