திருப்புவனம் செப்:16 சிவகங்கை மாவட்டம்
திருப்புவனம் ஒன்றிய நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளர் த.சேங்கைமாறன் தலைமையில் ஊர்வலமாக சென்று அண்ணா அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் வசதி சேங்கைமாறன் நகரச் செயலாளர் நாகூர் கனி பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான் ஒன்றியம் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.