தஞ்சாவூர் ஜூன் 7.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப் பு பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் அன்னைசத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது .இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குந்தவை நீச்சல் குளம் பார்வையா ளர்கள் கட்டிடம் புனரமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு விரை வாக பணியை முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினார்
அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் மாணவிகள் தங்கும் விடுதி கட்டிட கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க க்கூடிய கிடங்கில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் பாதுகாப்பாக வைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் ,மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் ஆகியோர் உடன் இருந்தனர்.