மதுரை ஜூலை 15,
அன்ன வாகனத்தில் உலா வந்த அழகர் மதுரை மாவட்டம் அழகர் மலையின் அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் ஆடி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இவ்விழாவின் முதல் நாளன்று சுந்தராஜ பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் வீதியுலா வந்த சுந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர். அன்ன வாகனத்தில் உலா வந்த அழகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.