கூடலூர்.
தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற முன்னாள் ராணுவ வீரர் உட்பட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6.5 கிலோ கஞ்சாவையும், இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர் தெற்கு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் நேற்று கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலை மந்தை வாய்க்கால் பாலம் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர் அப்போது 4 பேர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் குமுளி நோக்கி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்த
னர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த துணி பையை பிரித்து பார்த்த போது பைக்குள் 6 கிலோ 500 கிராம் கஞ்சா மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரனையில் அவர்கள் கடலூர் மாவட்டம் கடலூர் பகுதியை சேர்ந்த சத்தியநாதன் மகன் லென்சி (22), தேனி மாவட்டம் கூடலூர் கருணாநிதி காலணியை சேர்ந்த சின்னராஜ் மகன் பாண்டியராஜ் (46) முன்னாள் ராணுவவீரர், ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் மணிகண்டன்(33), பாக்கியராஜ் மகன் பொன்மணி (20) என தெரியவந்தது போலீசார் 4 பேர் களையும் கைது செய்து இவர்களிடம் இருந்து 6 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். போலீசார் தொடர்ந்து அவரிடம் நடத்தி விசாரணையில், அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து அதை கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.இது ஒரு புறம் இருக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து தேனி மாவட்டத்தில் முழுமையாக போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஒடுக்க முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.