தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக விருதுநகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கே கே எஸ் எஸ் ஆர், ஐ பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி டி ஆர் பழனி வேல் தியாகராஜன்
பொன்னாடை கொடுத்து வரவேற்றார்கள். மேலும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றார்கள். உடன்
எம்எல்ஏ கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன்உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். மணிமாறன், முத்துராமன், மருதுபாண்டியன், ஜிபி ராஜா, நேரு பாண்டியன் மேலும் கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக விருதுநகரில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.