தேனி மாவட்டம் கம்பம் அருகை புறவழிச்சாலையில் ஐயப்ப பக்தர்கள்சபரிமலை தரிசனம் சென்று திரும்பிய பொழுது விபத்து ஏற்பட்டது.
கம்பம் புறவழிச் சாலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று சொந்த ஊர் திரும்பிய ஐயப்ப பக்தர்களின் கார் விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலியாகி நான்கு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைசேர்ந்த மஞ்சுநாதன் என்பவர் தனது மகன் சித்தார்த்துடன் அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் குழுவினருடன் சபரிமலைக்கு சென்று நேற்று பகல் சுவாமி தரிசனம் செய்து விட்டு காரில் குமுளி வழியாக இரவில் சொந்த ஊர் திரும்பி வந்துள்ளார்.
டிரைவர் கார்த்திக் காரினை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது கம்பம் புறவழிச் சாலையில் உள்ள மணிகட்டி ஆலமரம் அருகே எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள சிக்னல் விளக்கில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதில் காரில் பயணம் செய்த எட்டு வயது சிறுவன் சித்தார்த் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த சிவக்குமார் புவனேஸ்வரன் கார்த்திக் மற்றும் சிறுவனின் தந்தை மஞ்சுநாதன் ஆகிய 4 ஐயப்ப பக்தர்களும் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலைக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிய கார் விபத்து ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இச்சம்பவம் குறித்து கம்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.