மார்த்தாண்டத்தில் துண்டிக்கப்பட்ட கை 6 மணி நேர ஆபரேஷன் மூலம் சேர்க்கப்பட்டது டாக்டர் ஐசக் விபத்து முறிவு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கட்டாரகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் (37). இவர் திருவட்டார் அம்மன் கோவில் அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி திருவட்டார் பஸ் நிலையம் அருகே பாஸ்ட் புட் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 3 ம் தேதி இரவு இவரது கடையில் வேலை பார்த்த நபர் ஒருவர் வெட்டியதில் மாரியப்பன் இடது கை துண்டிக்கப்பட்டது. துடிதுடித்து போன மாரியப்பனை அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் மூலம் குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி செய்தனர்.
அங்கிருந்து துண்டிக்கப்பட்ட கையை ஐஸ் -ல் வைத்து மார்த்தாண்டம் ஐசக் விபத்து எலும்பு முறிவு மருத்துவமனைக்கு உடனடி அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஐசக் சுந்தர்சென் தலைமையில் டாக்டர் ஆஷ்லி ஐசக், பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் டாக்டர் ரபீக், ரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் குழுவினர் ஆறு மணி நேரம் ஆப்ரேஷன் செய்தனர்
முதலாவதாக துண்டிக்கப்பட்ட எலும்புகள் இணைக்கப்பட்டது பின் இரத்த ஓட்டம் சரி செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து கை நரம்பு உணர்ச்சி நரம்பு ஆப்ரேஷன் நடந்தது. தொடர்ந்து 20 நாட்கள் சிகிச்சையில் இருந்த மாரியப்பன் கை நல்ல நிலையில் இயங்க ஆரம்பித்தது.
இதுகுறித்து ஐசக் விபத்து எலும்பு முறிவு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஐசக் சுந்தர்சன் கூறியதாவது:-
மாரியப்பன் கை துண்டிக்கப்பட்டதும் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்குச் சென்று ஐஸ் கட்டியில் துண்டிக்கப்பட்ட கையை வைத்து சரியான நேரத்தில் இங்கு வந்தார்.
தொடர்ந்து எனது தலைமையில் டாக்டர் குழுவினர் மிகத் துல்லியமாக நுணுக்கமாக ஆறு மணி நேர ஆபரேஷன் செய்யப்பட்டது .
தற்பொழுது கை நல்ல நிலையில் இயங்கி வருகிறது ரத்த ஓட்டம், நரம்பு உணர்வுகள் போன்றவை நல்ல நிலையில் உள்ளது.
இந்த நல்ல நேரத்தில் துண்டிக்கப்பட்டு சுமார் ஆறு மணி நேரம் தனியாக இருந்த கையை இணைத்து நல்லபடியாக ஆபரேஷன் செய்ய முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு டாக்டர் ஐசக் சுந்தர்சென் கூறினார்.
கை துண்டிக்கப்பட்ட மாரியப்பன் கூறியதாவது:-
கடந்த மாதம் மூன்றாம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு கை துண்டிக்கப்பட்டது என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் இருந்தோம்
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி செய்தனர் அவர்கள் இந்த கையை இணைக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.
பின் துண்டிக்கப்பட்ட கையை ஐஸ் – ல் வைத்து நண்பர்களின் ஆலோசனையின் படி ஐசக் விபத்து எலும்பு முறிவு மருத்துவமனைக்கு வந்தோம். நல்லபடியாக ஆபரேஷன் செய்து தற்போது கை நல்ல முறையில் இயங்குகிறது முழுமையான உணர்வுகளும் உள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
பட விளக்கம்: கை துண்டிக்கப்பட்ட மாரியப்பன் உடன் டாக்டர் ஐசக் சுந்தர்சென் தலைமையிலான டாக்டர் குழுவினர்