கோவை டிச:04
பொள்ளாச்சி- ஆச்சிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர் அருகே அமைந்துள்ள அம்மா திருமண மண்டபத்தை பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இந்த அம்மா திருமண மண்டபத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகையால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு தானே ஏற்று நிர்வாகம் செய்தால் பொதுமக்கள் எளிதாக பயன்பெறுவார்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக கோவை தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேரன் நகர் சுரேஷ் அவர்களின் தலைமையில் பொதுமக்கள் திரண்டு பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.