திண்டுக்கல் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா, விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா, சமத்துவ நாள் அணிவகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கா மைதீன் பாவா தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் தமிழரசு, துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினர். மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் க. சவரியம்மாள், துணைச் செயலாளர் இரா. ஜெ. திவ்யா, நகரப் பொறுப்பாளர் ஜெயந்தி, நகரத் துணைப் பொறுப்பாளர் ஜாக்குலின், முகாம் பொறுப்பாளர் சிறுமணி, ஒன்றிய பொறுப்பாளர்கள் லதா, ஆரோக்கிய செல்வி உட்பட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூண்டு வரை பேரணியாக நடந்து சென்று டாக்டர் அம்பேத்கர் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



