நாகர்கோவில் ஏப் 15
குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அரசியல் சட்ட மேதை, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்காய் போராடிய போராளா,பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்க சட்டமியற்றி பெண்களை மீட்டெடுத்த போராளி,ரிசர்வ் பேங்க் அமைய காரணமான பொருளாதார மேதை, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்காய் போராடிய அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வுக்கு குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தா.சுபாஷ் சந்திர போஸ் தலைமை தாங்கினார்.ஜீவா சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து அண்ணலுக்கு மாலை அணிவித்து மரியாதையை ஆரல் மூத்த தோழர் செல்வராஜ் செலுத்தினார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் தோழர் எஸ்.அனில்குமார்,ஜி.சுரேஷ்மேசியதாஸ் அனைத்திந்திய முற்போக்குக் பேரவையின் மாநில துணைத்தலைவர் தோழர் எஸ்.சுந்தரம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர் தோழர் எஸ்.கே.கங்கா, மாவட்ட துணைத்தலைவர் ஆரல் பகவதிஇந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் தோழியர் செல்வராணி மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் தா.மகேஷ், ஆரல் அருள்குமார், தக்கலை ராஜ்,ஆரல் மாநகர பொருளாளர் வாசு,ஆரல் பாலன் இசைக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் புஷ்பராஜ் ,ஆரல் சுந்தரம் ,குருசாமி, சுப்பிரமணியம், தோழர்கள் நாகப்பன்,மைக்கேல்,சாம், பி.எஸ்.என்.எல்.செல்வசுப்பிரமணியம் தோழர் கண்ணண் உட்பட திரளான தோழர்கள் கலந்து கோஷங்கள் எழுப்பினர்.