கிருஷ்ணகிரி டிச 7:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி அதிமுகவின் சார்பில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.எம்.மாதையன் தலைமையில், பர்கூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.ராஜேந்திரன், பர்கூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயபாலன், காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றிச்செல்வன், ஆகியோரின் முன்னிலையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். அம்பேத்கரின் தியாகத்தை போற்றிடும் வகையில் அ இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு அம்பேத்கரின் நினைவு தினத்தை அனுசரித்தனர். பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.