தருமபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்ட, நகர கழக சார்பில் திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து ம்.மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டணம், சொத்துவரி மற்றும் பல வரிகளை உயர்த்தியதை கண்டித்தும்.மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்.கழக சார்பில் மாபெரும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கே. பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது .இதில் நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி, எஸ். ஆர். வெற்றிவேல், தகடுர் விஜயன்,சங்கர், அசோகன், சுபாஷ் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



