காஞ்சிபுரம் ஏப்ரல் 15
காஞ்சிபுரம் மாவட்டம் மேற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் கீழம்பியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் அம்பி விமல்ராஜ் ஏற்பாட்டில் மேற்கு ஒன்றியச் செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்ட தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் திறந்து வைத்தார்.
மேலும்
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க அதிமுக-வினர் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், தர்பூசணி பழங்கள் குளிர்பானம்,
இளநீர், நுங்கு ஆகியவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த விழாவில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம், மாநில கலைப் பிரிவு துணைச் செயலாளர் டில்லி பாபு,
மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம் உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.