சென்னை மேடவாக்கம்
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைப்படி அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மேடவாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ கண்ணபிரான் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை புறநகர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் தலைமையில் பரங்கிமலை அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர்
பெரும்பாக்கம் ராஜசேகர் முன்னிலையில் மாவட்ட துணை செயலாளர் கண்ணபிரான் ஏற்பாட்டின் படி மேடவாக்கம் ஊராட்சியில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் அதிமுக மாநில இலக்கிய அணி துணை செயலாளர் எம்.ஜி.சக்திவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.