ராமநாதபுரம், மார்ச் 5-
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், வளர்ச்சிப் பணி 2026 தேர்தலில் அதிமுக சமூக வெற்றி பெறுவது குறித்து வியூகம் அமைத்து செயல்படுவதற்கான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.
மாநில அமைப்புச் செயலாளர்
சுதா கே.பரமசிவம், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் ராஜவர்மன்
ஆகியோர் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் தங்களுக்கு வழங்கியுள்ள பணிகள் குறித்தும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறுவதற்கு எந்த மாதிரி செயல்பட வேண்டும் என்றும் கிளை செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர். அதுமட்டுமின்றி செயல்படும் நிர்வாகிகள் மட்டுமே களத்தில் நிற்க வேண்டும் செயல்பட முடியாத நிர்வாகிகள் ஒதுங்கிக் கொள்ளலாம் செயல்படுபவர்களுக்கு வழி விடுங்கள் அவர்களுக்கு நாங்கள் துணையாக நின்று நான்கு தொகுதியையும் அதிமுகவின் கோட்டையாக மாற்றி அமோக வெற்றி பெறச் செய்கிறோம் என்று பேசினர்.
கூட்டத்தில்
மாநில அமைப்பு செயலாளர் அன்வர்ராஜா , மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட இணைச்செயலாளர் கவிதா சசிகுமார்,
துணைச்செயலாளர் பாலாமணி மாரி,
எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் நிறைகுளத்தான், துணைச் செயலாளர்கள் ஆணிமுத்து, சுந்தரபாண்டியன், ரத்தினம், முத்தையா, மலேசியா பாண்டியன், அம்மா பேரவை இணைச்செயலாளர் சதன் பிரபாகரன், துணைச்செயலாளர் முனியசாமி, மாணவரணி துணைச்செயலாளர் செந்தில்குமார், விவசாய அணி துணைச் செயலாளர் பெரியசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார், மாவட்ட பொருளாளர் குமரவேல் கலந்து கொண்டனர். மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் நன்றி கூறினார்.