போகலூர், ஏப்.14-
அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடியார் ஆணைக்கிணங்க
பாகம் கிளை கழக நிர்வாகிகள் அமைத்தல் தொடர்பாக மற்றும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை, கழக வளர்ச்சிப் பணி தொடர்பான ஆய்வு கூட்டம் போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி தனியார் மகாலில் நடைபெற்றது.
கூட்டத்தில்
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில்
இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள கழக அமைப்பு செயலாளர்
சுதா கே.பரமசிவன், கழக புரட்சி தலைவி அம்மா பேரவை இணை செயலாளர், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் , ஐடி விங் மண்டல செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் பிற்பகல் 12.மணி முதல் 3..00 மணி வரை பூத் கமிட்டி நடைபெற்றது. கூட்டத்தில் போகலூர் ஒன்றியக் கழகச் செயலாளர் லோகிதாசன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆனைவரும் கலந்து கொண்டனர்.
பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டக் கழக நிர்வாகிகள், பிற அணிச்செயலாளர்கள் ஒன்றியக் கழக நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். கூட்ட ஏற்பாடுகளை போகலூர் ஒன்றிய செயலாளர் லோகி தாசன் செய்து இருந்தார்.