சிவகங்கை ஜுலை:08
ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை எதிர்த்து இன்று சென்னையில் நடைபெறவுள்ள மாநில திமுக வழக்கறிஞரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக
சிவகங்கை மாவட்ட திமுக வழக்கறிஞரணி அமைப்பாளர் பாஸ்கரன் மாவட்ட துணை அமைப்பாளர் துரை வேலவன் மற்றும் பில்லூர் கார்த்திக் ஆகியோரது தலைமையில் சென்னை நோக்கி பயணித்தனர்.
இதனிடையே நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் மற்றும் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆலோசனைகளை பெற்று சென்னை செல்வதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக வழக்கறிஞரணி அமைப்பாளர் பாஸ்கரன் துணை அமைப்பாளர் துரை வேலவன் பில்லூர் கார்த்திக் சக்கந்தி முருகன் மேனாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சித்தலூர் பா.ஆனந்தக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.