நாகர்கோவில் – பிப் – 26,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரி பகுதியில் இயங்கி வரும் கலைவாணர் அரசு தொடக்கப்பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவனத்தின் விளம்பரங்கள் எழுதும் பணி நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது. தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாநகர தலைவர் சுனில் குமார் , மற்றும் பாஜக நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவனங்களின் சுவர் விளம்பரங்கள் எழுதலாமா ? என்று கேள்வி எழுப்பினார் . அதற்க்கு பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.எம்.சி. கூட்டத்தின் மூலம் தீர்மானம் போட்டு தான் இந்த பணிகள் நடைபெறுகிறது. இது போன்ற பணிகளுக்கு தமிழக அரசு எங்களுக்கு நிதி உதவி அளிப்பதில்லை எனவே நாங்கள் தனியார் நிறுவனங்களையும், தொழில் அதிபர்களையும் அனுகி தான் இது போன்ற சிறு, சிறு, பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவு உள்ளது . என கூறினார். அதற்க்கு எஸ்எம் சி கூட்டத்தில் நீங்கள் இது சம்மந்தமாக நிறைவேற்றிய தீர்மாணங்களை காட்டுங்கள் என்று கேள்வி எழுப்பியதற்க்கு பள்ளி தலைமை ஆசிரியை , பதில் கூறாமல் அந்த தனியார் நிறுவன சுவர் விளம்பரங்களை முற்றிலுமாக அளித்து விடுகிறோம் என்று கூறி சுவற்றில் எழுதப்பட்ட அனைத்து விளம்பரங்களையும் அழித்து விடுமாறு பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்களிடம் கூறினார் இதனால் சுவற்றில் எழுதப்பட்ட அனைத்து விளம்பரங்கள் அனைத்தையும் ஊழியர்கள் அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அரசு உத்தரவு படி அரசு சுவரில் அரசு விளம்பரங்கள் தவிர தனியார் விளம்பரங்களோ , சுவரொட்டிகளோ ஒட்ட கூடாது என்று விதிமுறைகள் இருப்பது கூட தெரியாமல் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது முற்றிலும் தவறானது என்று பாஜக வடக்கு மாநகர தலைவரும் நாகர்கோயில் மாநகராட்சி 12 – வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சுனில் குமார் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.