கிருஷ்ணகிரி, மே.13
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் ஒன்றியம் தொகரப்பபள்ளி கிராமத்தில் அதிமுக கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் 71- வது பிறந்தநாள் விழா தொகரப்பள்ளி கிராமத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயபால் தலைமையில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஏ. பிரபு ஏற்பாட்டில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரு கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான கே. அசோக்குமார்,பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, எஸ் எம் மாதையன், கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி செயலாளர் பி. அண்ணாமலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு சி.சின்னசாமி, கிளை செயலாளர்கள் சாந்த மூர்த்தி, கோபால், சாமுடி,சேட்டு, மாதேஷ், காளியப்பன், நடராஜ், சுப்பிரமணி, கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ்,மகளிர் அணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உமா லட்சுமி பிரபு,சுதா, ராஜேஸ்வரி, கனகா, மனோரா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.