ஈரோடு, மார்ச் 13-
ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக வெப்பத் தின் தாக்கம் 100 டிகிரியை கடந்து செல்கிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குளிர்பானங்களை நாடுகின் றனர். இதனால் கடைகளி லும் சாலையோர தற்காலிக கடைகளிலும் இவற்றின் விற்பனை சூடு பிடித்துள் ளது. இதுகுறித்து மாவட்ட
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறியதாவது:-
போலி குளிர்பானங்கள் உடலுக்கு கடும் கேடு விளை விக்கும். இதை கண்டுபி டித்து தடுக்க 4 சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதில் மொடக்குறிச்சி பகுதியில் ஒரு நிறுவனம் பழைய பாட்டில்களில் குளிர்பானத்தை அடைத்து விற்பனைக்கு வைத்திருந் ததை கண்டறிந்து நடவ டிக்கை எடுத்துள்ளோம். எலு மிச்சை பழம்,
புரூட் ஜூஸ், பாதாம் பால், சோடா உள்ளிட்ட குளிர்பா னம் தயாரிக்கும் குடிசைத் தொழில் செய்வோரும் கட் டாயமாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் உரிமம் பெற்று தயாரித்து விற்க வேண்டும். சூரிய ஒளியில் அதிக நேரம் குளிர்பானங்கள் படும்படி வைக்கக் கூடாது. குளிர்பான பாட்டிலில் தயா ரிப்பு தேதி, காலாவதி தேதி கட்டாயம் இடம் பெற வேண்டும். ரோட்டோரங்க ளில் வைத்து குளிர்பானம் விற்றாலும் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.