நாகர்கோவில் அக் 10
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள புனித கார்மல் அன்னை மகிமை ஊர் வளர்ச்சி மற்றும் நிர்வாக கமிட்டி சார்பில் 50க்கும் மேற்பட்டோர் எஸ் பி சுந்தரவதனத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது”நாங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாக்கு உட்பட்ட ராமபுரம் ஊராட்சியில் வாழ்ந்து வருகிறோம், எங்கள் ஊராட்சி எல்லையில் அமைந்துள்ள குருசடியை நேற்று இரவு சிலர் சேதப்படுத்தி உள்ளனர், மதக்கலவரத்தை தூண்டு வகையில் இந்த செயல் நடைபெற்றதாக தெரிகிறது,குருசடியில் உள்ள மாதா சொருபத்தையும் சேதப்படுத்தி உள்ளார்கள் இதனால் எங்கள் ஊர் பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர், எனவே இந்த குற்ற செயலில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இது போன்ற சம்பவம் நடக்காத வகையில் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர்