திண்டுக்கல் பஞ்சம்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த திருப்பலியில் உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் சுமார் 2000 பேர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த சந்துரு என்பவர் மிகப்பெரிய தடியை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தினார். பொதுமக்களை பார்த்து கோவிலை விட்டு வெளியேறுங்கள்எல்லாரையும் அடித்துக் கொன்று விடுவேன் என்றும் எனக்கு பின்னால் அரசியல் பலம் ஆள் பலம் இருக்கிறது என்னை பகைத்துக் கொண்டால் நான் உங்களை டிராக்டரை வைத்து நசுக்கி கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார் இந்த நபர் மீது சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் இவருடைய செல்வாக்கின் காரணமாக உடனடியாக வெளியே வந்து விடுகிறார். எனவே கிறிஸ்தவ சமூகமானது இவரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டு இருக்கிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக தலையிட்டு விசாரணை செய்து கிறிஸ்துவ மக்களுக்கு நல்ல நீதியை வழங்க வேண்டும் என்று ஊர் மக்கள் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
இந்த நிகழ்வில் அருட்தந்தை பீட்டர் ராஜ், அருட்தந்தை லாரன்ஸ், அருட்தந்தை ஜோசப் மில்டன் மற்றும் ஊர் தலைவர் சதீஷ் உப தலைவர் சேகர் முன்னாள் தலைவர் ஜான் பீட்டர் இவர்களுடன் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.



