தருமபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு ப்பணி துறைக்கு
தமிழ் நாடு அரசு கடந்த நான்கு ஆண்டு காலங்களில் செய்த சாதனைகள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையை சேர்ந்த பணியாளர்களின் நலனுக்காக ரூ.16.11 கோடி மதிப்பில் 1,350 தீ பாதுகாப்பு உடைகளும், 662 மூச்சுக் கருவிகளும், 3,000 மீட்பு உடைகளும்,
ரூ.75.65 கோடி மதிப்பில் 75 புதிய நீர் தாங்கி வண்டிகள்,12 அவசரகால சிறிய மீட்பு ஊர்திகள்,
34 பெரும தண்ணீர் லாரிகள்,7 அதிக உயர் அழுத்த நீர் தாங்கி வண்டிகள்,50 இரு சக்கர வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட 85.78 கோடி நிதியும் வழங்கி உள்ளது மேலும் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் அமைக்க ரூ.49.30 கோடி நிதி ஒதுக்கி 23 புதிய தீயணைப்பு மீட்பப்பணி நிலையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீயணைப்பு பயிற்சி மையங்களுக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. மேலும்
வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப்பணியின் போது உயிர்களையும், உடமைகளையும் திரம்பட மேற்கொள்வதற்கு ஏதுவாக பயிற்சி மையங்களுக்கு மாநில பயிற்சி கழகம் அமைக்க ரூ.21.85 கோடி நிதியும் வழங்கியுள்ளது.
தமிழக அரசால் தீயணைப்பு துறையை மேம்படுத்த அரசு எடுத்த தொடர் நடவடிக்கையின் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட 88,623 தீ விபத்துக்களில் 496 மனித உயிர்களையும், ரூ.2,200 கோடி உடமைகளையும் காப்பாற்றி உள்ளனர்கள். மேலும், 382005 மீட்பு அழைப்புகளில் 50,368 மனித உயிர்களையும், 2,21,849 விலங்கினங்களையும் காப்பாற்றி உள்ளனர். மேலும், இதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டத்திற்கு 12,000 லிட்டர் கொள்ளவு கொண்ட பெரும தண்ணீர் லாரி ஒன்று தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்திற்கும், அலுவலர்கள் விரைந்து சென்று பணியாற்ற ஏதுவாக பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்திற்கு இரு சக்கர வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு விரைந்து சென்று சேவை செய்ய தமிழ்நாடு முழுவதும் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களுக்கும் தண்ணீர் லாரிகள், நீர் தாங்கி வண்டிகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் வழங்கபட்டு வருகிறது. என தருமபுரி மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.