தஞ்சாவூர் ஜூன் 23
தஞ்சாவூர் பரிசுத்தம் பொறியியல் கல்லூரியின் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மாணவி எஸ் எஸ்.கிருபாகரி கடந்த ஆண்டு தேர்வில் அண்ணா பல்கலைக்கழக மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக 44 வது பட்டமளிப்பு விழாவில் ,அதற்கான தங்கம் பெற மாணவி கிருபாகரி தேர்வு பெற்றுள்ளார் .மாணவி கிருபாகரியை கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் ,முதல்வர் பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியர்கள் வாழ்த்தினர்.