சென்னை, அக்டோபர்- 23, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை
500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளது .
அப்போலோ
மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி இது குறித்துக் கூறுகையில், “அப்போலோ
மருத்துவமனை
வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகள் எங்கள் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் இதய நோய் சிகிச்சையிலும் ஒரு மைல்கல்லாகும். இத்தகைய மேம்பட்ட நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம், குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறைகளை வழங்கி, எங்களிடம் வரும் நோயாளிகள் குணமடைந்து விரைவில் நலம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்வதோடு, அதையே எங்களது நோக்கமாகவும் கொண்டுள்ளோம்.” என்றார்.
ரோபோடிக் மற்றும் குறைந்தபட்ச ஊடுருவல் இதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.எம்.யூசுப் இது குறித்துக் கூறுகையில், “
ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை மூலம், விரைவாக குணம் அடைதல், குறைந்த வலி ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன.
இந்த இதய சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் இந்த முன்னேற்றம் குறிப்பாக 30 முதல் 60 வயதுடைய நோயாளிகளுக்குக் அதிக அளவில் பயன் அளிக்கும்.
நோயாளிகள் விரைந்து
இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி பணிகளை மேற்கொள்ளலாம். பாரம்பரிய அறுவை சிகிச்சையை விட கணிசமாக, மிக துரிதமாக குணமடையும் பலனையும் இது வழங்குகிறது.”
ரோபோடிக் உதவியுடன் செய்யப்படும் இதய அறுவை சிகிச்சை ஸ்டெர்னோடோமி அல்லது மார்பில் பெரிய அளவில் துளையிட்டு சிகிச்சை செய்யாமல் துல்லியமான சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் இதய பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சிறிய ரோபோ கைகள், உயர் வரையறை 3டி கேமரா ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இது பாரம்பரிய முறையில் செய்யப்படும் திறந்த இதய அறுவை சிகிச்சையை விட பல வகையான மேம்பட்ட நன்மைகளை வழங்குகிறது என்றார்