தேனி அக் 22: தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆலோசனையின் பேரில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் பசுமையை போற்றும் விதமாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒடைப்பட்டி பேரூராட்சி சார்பில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சியில்ஒடைப் பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் ஆர் . தனுஷ்கோடி தலைமையில் ஒடைப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சீப்பாலக்கோட்டைரோடு முதல் தென்பழனி வரை பேரூராட்சிக்கு பாத்திய பட்ட இடத்தில் பனைமர விதைகளை நட்டு வைத்து துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் உ. குமரேசன் செயல் அலுவலர் ஏ. சுதா ராணி இளநிலை உதவியாளர் மீனா சுகாதார ஆய்வாளர் கார்த்திக் பேரூராட்சி 15 வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.