சங்கரன்கோவில்: ஜுலை:11
சங்கரன்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில் நகர் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இக்கோவிலின் முக்கிய திருவிழாவாக ஆடித்தபசு திருவிழா கொண்டாடப்படுகிறது 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவிற்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர் தவக்கோலத்தில் தவமிருக்கும் கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுப்பது இத்திருவிழாவின் முக்கிய அம்சமாகும் திருவிழா காலத்தில் ஒவ்வொரு நாளும் சிவபெருமான் சங்கரநாராயணர் சங்கர கோமதிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சப்பரங்களில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்வு பக்தர்கள் பக்தியோடு சுவாமி தரிசனம் செய்வார்கள் வருகின்ற 21ஆம் தேதி அன்று ஆடித்தபசு காட்சி யை காண நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெற இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் இணை ஆணையர் அன்புமணி துணை ஆணையர் கோமதி அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா அறங்காவலர்கள் முப்பிடாதி ராமகிருஷ்ணன் வெள்ளைச்சாமி முத்துலட்சுமி கொண்ட குழுவினர் கோவில் அலுவலர்கள் மற்றும் மண்டகப் படிதார்கள் செய்துள்ளனர் நகர் முழுவதும் சுகாதாரப் பணிகளை நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகராட்சி கமிஷனர் சபாநாயகம் சுகாதார அலுவல ர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் செய்து ள்ளனர்.