ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆடி 4 ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு மஞ்சமாதா அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தலைமை குருசாமி மோகன் தலைமையில் கோயில் நிர்வாகிகள் சிறப்பு பூஜை ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மஞ்சமாதாவை தரிசித்து அருளை பெற்று சென்றனர்.



