வேலூர்_24
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வந்து செல்கிறனர் இந்த நிலையில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடியில் இருந்து குடியாத்தம் வரை செல்லும் வழித்தடம் 9-ல் பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர்
இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காட்பாடி காவல் உதவி உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் மிதிலேஷ்குமார் ஆகியோர் பேருந்தில் பயணம் செய்த பள்ளி கல்லூரி மாணவர்களை கீழே இறக்கி படியில் பயணம் செய்ய கூடாது படியில் பயணம் நொடியில் மரணம் என எச்சரித்து அறிவுரை வழங்கி அனுப்பினர்