ஈரோடு ஜூலை 19
சுதந்தர போராட்ட வீரர் பொல்லான் நினைவு நாள் ஈரோடு அருகே உள்ள அரச்சலூர் நல்ல மங்கா பாளையத்தில் கடைபிடிக்கப்பட்டது இதை ஒட்டி அவரது படத்துக்கு ஆதி தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இதன்பிறகு அவர் கூறியதாவது மதுரை வீரனுக்கு பல இடங்களில் கோவில் உள்ளது அவரை தெய்வமாக வணங்கி வருகிறார்கள் எனவே அவருக்கு தமிழக அரசு சிலை வைத்து மணி மண்டபம் கட்ட வேண்டும் .ஆணவ படுகொலைகள் பல இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது .இந்த ஆணவப் படுகொலைகளை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை தடுக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங்கின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளை கைது செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்
இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் விசு குமார் அமைப்பு செயலாளர் திலீபன் மாநில ஆலோசகர் விடுதலை குமார் மாவட்ட செயலாளர் தினகரன் அமைப்பு செயலாளர் திலீபன் மாவட்ட தலைவர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.