நீலகிரி. நவ.20.
நீலகிரி மாவட்டம் 57வது நூலக வார விழாவில் கோத்தகிரி நூலகத்தில் காகிதமும் ஆயுதம் என்னும் தலைப்பில் சிந்தனை கவியரங்கம் நடைபெற்றது. கோவை குமரகுரு கல்லூரி முனைவர் சுனில் ஜோகி மற்றும் ஹில்போர்ட் பள்ளி தாளாளர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கவியரங்கை தொடங்கி வைத்தனர். பொன்மாலைப் பொழுது கவிஞர் விவேராசு தலைமையில் நடந்த கவியரங்கில் மரபுக் கவிஞர் சங்கரன், புதுமை கவிஞர் பிரேம் சுரேஷ் கலைச்சுடர்மனி நீலகிரி நிர்மலா, எழுத்தாளர் கவிஞர் அகரம் சிவா, கவிதாயினி செயக்குமாரி, கவிஞர் லிங்கன், கவிஞர் சிவராமன் ஆகியோர் கவிதை பாடினர். கோத்தகிரி பகுதி பள்ளி மாணவர்கள், நூலக வாசகர் வட்டத்தினர், இலக்கிய மன்றத்தினர், ஊடக பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கவிஞர் பிரேம் சுரேஷ் கவிஞர் லிங்கன், ஆகியோரின் கவிதை நூல்கள் வெளியிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.