கன்னியாகுமரி ஜுன் 11
அஞ்சுகிராமத்தை அடுத்த வட்டக்கோட்டையில் கடந்த 24 வருடங்களாக ஏழை எளிய மக்களின் நல்லவாழ்வுக்காக செயல்பட்டு வரும் ஹெல்த் மிஷன் சர்வீஸ் சென்டரில் மாதத்தில் ஒரு முறை குழந்தைகளின் நல்வாழ்வுக்கான கருத்துக்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த கல்வியாண்டை ஒட்டி இன்று பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்திற்கு ஹெல்த் மிஷன் சர்வீஸ் சென்டரின் நிர்வாக இயக்குனர் மேரிகொடியான் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சேன்சோ கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினார்.மேலும் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.