திருப்பூர், செப். 6:
ஒழுக்கமே சுதந்திரம் அகில இந்திய பரப்புரை இயக்கம்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி திருப்பூர் கிளை சார்பாக
ஆசிரியர்கள் சங்கமிக்கும் சிறப்பு நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சுமையா அப்துல் வதூத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய மகளிர் அணி துணைச் செயலாளர் ராபியா பஸரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இன்றைய கால சூழ்நிலையில் மனித சமூகத்திற்கு மத்தியில் நிலவு வரும் ஒழுக்க சிதையியல் குறித்தும்,
அதன் பாதிப்புகள் சமூகத்தில் எந்த அளவு பெரிய தீமைகளையும்,
அழிக்க முடியாத தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை குறித்தும்
எதிர்வரும் சந்ததிகளுக்கு குறிப்பாக வளரும் மாணவ மாணவிகள்,குழந்தைகள் எந்த மாதிரியான ஒழுக்க முறைகளோடு அவர்கள் வளர வேண்டும் என்பது குறித்து பேசினர்.
திருப்பூர் முழுவதும் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
—–
திருப்பூரில் ஆசிரியர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
—–