தமிழ்நாடு பத்திரிக்கை மற்றும் ஊடகப் பணியாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பல்வேறு சேவைகளை செய்து வருபவரும், ரெட் கிராஸ் சமூக செயற்பாட்டாளர் பிஎஸ்என்எல் துணைக் கோட்டப் பொறியாளர் முனைவர் கவிஞர் ஆ.சுசிலாமேரிக்கு சேவைத் தேனீ விருதினை திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் விருது வழங்கி பாராட்டி கௌரவித்தார். மேலும் பல்வேறு சேவைகளுக்காக 50க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் ஹைருல்லா மற்றும் நிர்வாகக் குழுவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.



