தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் இந்து முன்னணியினர் சார்பில் திருவாடுதுறை அருள்மிகு சோமசுந்தரி அம்பாளுக்கு 501 மஞ்சள் நீர் அபிஷேகம் பஜாரில் உள்ள ஸ்ரீ செந்தில் விநாயகர் ஆலயத்தில் இருந்து திரலான பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ஜெயராம் நகரத் தலைவர் வெங்கடேசன் நகரப் பொருளாளர் விஜய பாஸ்கர் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராணி இந்து முன்னணி கிளை செயலாளர் முருகேஸ்வரி ஆனந்தி பாரதிய ஜனதா கட்சி மண்டலத் தலைவர் முருகேச பாண்டியன் ராஜாராம் நகரச் செய்தி தொடர்பாளர் பாலமுருகன் மற்றும் நுற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.



