வேலூர்=13
வேலூர் மாவட்டம் ,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமையிலும் ,தமிழ்ச்செல்வி, விஜயலட்சுமி ,சசிகலா, மகாலட்சுமி, லோகநாயகி, சபிக் அஹமத், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தவாறு சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9000/ வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ருக்குமணி ,அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ,வேலூர் சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மற்றும் வேலூர் மாவட்ட குழு உறுப்பினர்கள் ,பலர் கலந்து கொண்டனர் .