நாகர்கோவில் பிப் 24
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான் கடை முத்து நியுரோ சென்டர். மற்றும் ,புனித அந்தோனியார் அருட் பணி பேரவை குருசடி, மேரிஸ் அறக்கட்டளை குருசடி இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் குருசடி புனித அந்தோணியார் ஆலயவளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இலவச மருத்துவ முகாமானது
நாகர்கோவில் மாநகராட்சி துணைமேயர் மேரி பிரின்சி லதா முன்னிலையில் ஆலய பங்குத்தந்தை அருட்பணி M.பெர்பெச்சுவல் ஆன்றனி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் அருட்பணி பேரவை செயலாளர் .R.ரமணி ஜெலிஸ், மேரீஸ் அறக்கட்டளை நிர்வாகிகள், அமலராஜா,கலிஸ்டஸ், மேரி ஷோபா,மருத்துவக் குழு மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..