நாகர்கோவில் நவ 3
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 17 வது வார்டு மற்றும் லைப் கேர் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நெசவாளர் காலனியில் உள்ள பூங்காவில் வைத்து 17 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கௌசிக தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவ ஆலோசனை, மகளிர் நல மருத்துவ ஆலோசனை, குழந்தைகள் நல மருத்துவ ஆலோசனை, எலும்பு நோய் சம்பந்தமான மருத்துவ ஆலோசனை போன்றவைகள் வழங்கப்பட்டன. இதில் அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்தனர். மேலும் இம் மருத்துவ முகாமினை தலைமை தாங்கி நடத்திய மாமன்ற உறுப்பினர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை மேயர்,மற்றும் மருத்துவ முகாமில் ஆலோசனை வழங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.