நாகர்கோவில் செப் 5
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூர் திமுக நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு பேரூர் அவைத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.கிளை செயலாளர் அருள் அய்யப்பன் வரவேற்றார்.
மாவட்ட துணை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு,பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பி.எல்.ஏ.2 நிர்வாகிகளுக்கு ஒன்றியச் செயலாளர் பாபு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.கிளைச் செயலாளர் விஜய கங்காதரன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன்,துணை தலைவி சரோஜா,கவுன்சிலர்கள் செல்வராஜ்,ஏஞ்சலாதேவி,நிர்வாகிகள் தமிழன் ஜானி, பொன் ஜான்சன், தமிழ்மாறன்,பானுமதி,முருகன்,சுயம்புலிங்கம்,ஜஸ்டின்ராஜ்,சுப்பிரமணியன்,பாலகிருஷ்ணன்,அகஸ்தியலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.