மரம் கடத்திய கும்பலுக்கு உதவிய வனச்சரகர்
சிசிடிவி காட்சிகள் வைரல்
அருமனை, அக் – 2
அருமனை அருகே உள்ள குக்கிராமம் ஒன்றை சேர்ந்த வாலிபர் வீட்டில் கடந்த 29- ஆம் தேதி கேரளா பதிவு கொண்ட வாகனம் ஒன்றில் சட்ட விரோதமாக தேக்கு மற்றும் ஈட்டி மரங்களை கடத்தி வைத்திருப்பதாக அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக களியல் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இது மரம் கடத்தல் கும்பலுக்கு வனத்துறை அலுவலகத்தில் இருந்து தகவல் கசிந்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி வன அலுவலகத்தில் இருந்து யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த கும்பல் கடத்தல் வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வனத்துறைக்கு தகவல் கொடுத்த வாலிபர் நேற்று காலை அந்த பகுதியில் டீ குடிக்க சென்றபோது, மரங்களைப் பதுக்கி வைத்திருந்த வீட்டை சேர்ந்த வாலிபர் அங்கு வந்து தகவல் கொடுத்த வாலி வரை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் கொடுத்து சென்றுள்ளார்.
இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்த அந்த வாலிபர் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே மரம் வெட்டி கடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.