நித்திரவிளை , ஜன- 28
தூத்தூர் அரசு மருத்துவமனை பகுதியை சேர்ந்தவர் புஷ்ப லீலி ( 42). அதே பகுதி புனித தோமையார் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (38) இவர் மீன்பிடித் தொழிலாளி. இருவருக்கும் சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று புஷ்ப லீலிக்கு சொந்தமான சுற்றுச்சுவரை கிறிஸ்டோர் கடப்பாரையால் உடைத்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட புஷ்ப லீலிக்கு கிறிஸ்டோபர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இது சம்பந்தமான புகாரின் பேரில் நித்ரவிளை போலீசார் கிறிஸ்டோபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.