திருப்பரங்குன்றம், ஆகஸ்ட் 29 –
மதுரை விளாச்சேரி அருகே மொட்டைமலை பகுதியை சேர்ந்தவர் தவசி தேவர். இவரது மகன் பரமன் (40). இவருக்கு சுபா என்ற மனைவியும் 7 வயதில் இரட்டைக் குழந்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதே பகுதியில் இவரது வீட்டின் அருகே வசித்து வரும் தூரத்து உறவினர் கரண் (27).
பரமன் மற்றும் கரன் இடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்ததாக சொல்கின்றனர்.
இந்நிலையில் பரமன் மாடு வளர்த்து வருவதால் மாட்டின் மூலம் கழிவு நீர் மற்றும் கொசுக்கள் வந்து தொல்லை செய்வதாக அடிக்கடி சண்டை போட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் கரண் பரமனை அறிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரமன் உயிரிழந்தார். இது குறித்து திருநகர் போலீசாரிடம் பரமனின் மனைவி சுபா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கரணை திருநகர் போலீஸார் தீவிரமாக
தேடி வருகின்றனர்.


