கன்னியாகுமரி, ஆக. 27 –
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் கன்னியாகுமரி அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கார், வேன் ஒட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் 48-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கார், வேன் ஒட்டுநர்கள் நலச்சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் திருப்பதி, பொருளாளர் முஜிபூர் ரகுமான், உறுப்பினர்கள், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தினேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் தம்பித்தங்கம், கன்னியாகுமரி பேரூர் கழகச் செயலாளர் எழிலன், முத்துசாமி, ஜெயராஜா, வழக்கறிஞர் பாலன், சுரேஷ், தங்கவேல், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



