திருப்பூர், ஆக. 25 –
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அவர் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் திருப்பூரில்
பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாந கர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
(திருப்பூர் வடக்கு), முன்னாள் எம்.பி. சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலு மணி எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது: எடப்பாடி பழனிசாமிக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சியோடு வரவேற்கிறார்கள். அவர் திருப்பூர் வருகையை முன்னிட்டு சுவர் விளம்பரங்கள் இரட்டை இலை சின்னத்துடன் வரையுங்கள். வீடு, வீடாக சென்று அழைப்பிதழை கொடுத்து பிரசாரத்துக்கு அழைக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரம் வாக்காளர்களை அழைத்து வர வேண்டும். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனி சாமி முதல்-அமைச்சராவது உறுதி. 210 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடு மலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம்எல்ஏ, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தாமோதரன் எம்எல்ஏ, எம்.எஸ்.எம். ஆனந்தன் (பல்லடம்), எம்எல்ஏ
கூட்டத்தில் கட்சியின் இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், ஜெயலலிதா பேரவை மாநில மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், மாவட்ட ஜெயலலிதா பேர அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய பேரவை செயலாளர்கள், பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் எஸ்.பி. வேலு மணி நிருபர்களிடம் கூறும் போது, ‘திருப்பூரை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது நமக்கு பெருமை. அனைத்து கட்சிகளும் அவரை ஆதரிக்க வேண்டும்’ என்றார்.



