தருமபுரி, ஆகஸ்ட் 19 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், மாற்று திறனாளிகளுக்கு உதவி தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 432 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் மனைவி சித்ரா என்பவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது வாரிசுதாரருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பணி நியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



