கோவை, ஆகஸ்ட் 16 –
79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் வார்டு எண் 80 க்கு உட்பட்ட மாநகராட்சி பள்ளிகளான செல்வபுரம் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒக்கிலியர் காலனி மேல்நிலைப் பள்ளிகளில் பொது சுகாதாரக் குழு தலைவரும் வார்டு கவுன்சிலருமான பெ. மாரி செல்வன் கொடியேற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும் பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்களின் யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேவசகாயம், தனலட்சுமி, ஜான் பாத்திமா ராஜ், வகுப்பு ஆசிரியர்கள், விளையாட்டு ஆசிரியர்கள், பெற்றோர் சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர் என்.ஜே. முருகேசன், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



