ஊத்தங்கரை, ஆகஸ்ட் 13 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் வாக்காளர்கள் நிலையம் பிரிப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சிவகுமார் வட்டாட்சியர் மோகன் தாஸ் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் துணை வட்டாட்சியர் சக்தி அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் தங்களுடைய வாக்குச்சாவடி நிலமை குறித்து எடுத்துரைத்தனர்.



